தமிழ்நாடு:



  • மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது, கலைத்துறையில் சிறந்த சேவைக்காக மறைந்த பின் அறிவிப்பு 

  • மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு விருது அறிவிப்பு 

  • குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார் 

  • குடியரசு தினத்தை ஒட்டு மின்னொளியில் ஜொலித்த அரசு கட்டடங்கள், செண்ட்ரல் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு 

  • ராமர் கோயிலை கட்டி மக்களை திசை திருப்புவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியை திணிக்கும் வேலையை பார்ப்பதாக குற்றச்சாட்டு 

  • மக்களவை தேர்தலில் மாவட்டங்களில் வெற்றி தோல்விக்கு அந்தந்த அமைச்சர்களே பொறுப்பு, வெற்றியை நழுவ விட்டால் அமைச்சர் பதவியும் நழுவும் என முதலமைச்சர் எச்சரித்ததாக தகவல்

  • நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து நடிகர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

  • மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற தெப்ப திருவிழா, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து - பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு 

  • பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் - ஹைதரபாதில் தலைமறைவாக இருந்தவர்கள் கைது 


இந்தியா: 



  • நாட்டின் 75 வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்.. டெல்லியில் அணிவகுப்புக்காக பிரம்மாண்ட ஏற்பாடு

  • டெல்லியில் இன்று அணிவகுப்பை பார்வையிடுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு தின  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு 

  • முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது, நடிகை வைஜெயந்திமாலாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு 

  • நாடு முழுவதும் குடியரசு தின விழாவை ஒட்டி மூவர்ணத்தில் ஜொலிக்கும் முக்கிய கட்டடம், 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு

  • ஜெய்பூரில் இருக்கும் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டர் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கோட்டையில் காட்சிபடுத்தியிருந்த கலைப்பொருட்கள் குறித்தும் கலைஞர்களிடம் கேட்டறிந்தார் 

  • அயோத்தி ராமர் கோயில் மாதிரியை பிரான்ஸ் அதிபருக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி, இந்தியாவின் யு.பி.ஐ பரிவர்தனை குறித்தும் விளக்கிக் கூறினார். 

  • குடும்ப அரசியல் செய்பவர்களை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்களிடம் அறிவுறுத்தல், பெரும்பாண்மை பலம் கொண்ட அரசியல் கட்சியால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என பேச்சு  


உலகம்:



  • பாலஸ்தீனர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை காசா முனையில் இஸ்ரேலியர்கள் மறியல் போராட்டம், உணவின்றி காசா தவிப்பதாக ஐ.நா வேதனை

  • அமெரிக்காவில் முதல் நைட்ரஜன் வாயு தண்டனை; காலக்கெடு தொடங்கியது

  • சிங்கப்பூர்: போலீசாரை எட்டி உதைத்த இந்தியா வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு  

  • அணுசக்தி திரன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா


விளையாட்டு:



  • கேலோ இந்தியா கோ - கோ  போட்டிகள் இன்று தொடக்கம், தமிழ்நாடு டெல்லி அணிகள் மோதல் 

  • ரோகன் போபண்ணாவிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு 

  • கேலோ இந்தியா போட்டிகள்: பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம்