நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை.


மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்ட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.


அந்த வகையில் முன்னதாக உள்ளூர் மக்கள் ஊக்குவிக்க யானை ஒன்று மரத்தில் மிக உயரத்தில் இருக்கும் பலாப்பழத்தை விடாமல் முயற்சித்து எக்கிப் பறிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.


 






பொதுவாகவே பலாப்பழ விரும்பிகளாக யானைகள் வலம் வரும் நிலையில்,  சுப்ரியா சாஹூ எனும் ஐஏஎஸ் அலுவலர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான ஷேர்களையும் ரீட்வீட்களையும் பெற்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.


இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.


 






யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்‌ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.


யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்‌ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.



இன்ஸ்டாவில் 53 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 2,20,000 லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.