உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டு தற்போதுதான் உலக நாடுகள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், தற்போது உலக நாடுகளை குரங்கம்மை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு குரங்கம்மை நோய் பாதிப்பு பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்று அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
செய்யக்கூடியவை :
- குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.
- கைகளை சோப்பைக் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அல்லது கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்பவர்கள் முகக்கவசம், அப்புறப்படுத்தக்கூடிய கைக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
- சுற்றுப்புறத்தை சுத்தமாக பேணிக்காக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை :
- குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் துணி, படுக்கை, தலையணை மற்றும் துண்டுகளை பயன்படுத்தக் கூடாது.
- குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, மற்றவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைக்க்கூடாது.
- குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் பொது நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
- குரங்கம்மை குறித்து தவறான தகவல் பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு குரங்கம்மை குறித்து மத்திய அரசு விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 30-ந் தேதி கேரளாவில் உயிரிழந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் ராஜஸ்தான், டெல்லியில் குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : Monkeypox: பரவி வரும் குரங்கு அம்மை நோய் ! 21 நாட்கள் தனிமைப்படுத்த கர்நாடக அரசு உத்தரவு!
மேலும் படிக்க : கை கொடுத்த கை: காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது குஜராத் பெண்ணின் கரங்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்