சமூக வலைதளங்களில் எப்போதும் வனவிலங்குகள் தொடர்பான வீடியோ வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானைகள் தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது யானை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. தன் வழியில் குறுக்கே நிற்கும் நபர் ஒருவரை தன்னுடைய அறிவால் டீல் செய்யும் அந்த யானையின் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 






அந்த வீடியோ சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில், யானை செல்லும் பாதையில் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்.அவர் பின்னால் சத்தமில்லாமல் வந்து நிற்கும் யானை அவரை அச்சமூட்டக் கூடாது என்றும், துன்புறுத்தக் கூடாது என்றும் யோசித்து தன் காலால் புழுதியை கிளப்பி தள்ளுகிறது. என்ன இது புழுதி என திரும்பி பார்க்கும் அந்த நபர் யானையைக் கண்டு மிரண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து ஓடுகிறார். அதன்பின்னர் அந்த யானை மெதுவாக தன் பயணத்தை தொடர்கிறது. இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பலரும் யானை உண்மையிலேயே அறிவாளியான ஒரு மிருகம். ஒருவரை துன்புறுத்தாமல் அவருக்கு எச்சரிக்கை விடுத்த அழகே தனி என பதிவிட்டுள்ளனர்.






முன்னதாக சாலையைக் கடக்கும் யானை வீடியோ ஒன்றும் வைரலானது. காட்டுப்பாதையில் சாலையை கடந்த யானை கூட்டத்தின் சீனியர் யானை ஒன்று, வாகனங்களில் காத்திருந்த மனிதர்களுக்காக நன்றி தெரிவித்த வீடியோ வைரலானது. ஒரு முறை பார்த்தால், திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அவ்வளவு அழகு அந்த வீடியோவில். இந்திய ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் கூட்டமாக சாலையைக் கடக்கும் யானைகளுக்கு வழிவிட்டு தூரத்தில் வாகனங்களோடு நிற்கின்றனர் மக்கள்.


சாலையைக் கடந்துவிடும் யானைகளின் கூட்டத்தின் கடைசி யானை, வாகனங்கள் நின்று கொண்டிருந்த பக்கத்தை திரும்பி பார்த்து தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண