பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும் குர்ப்ரீத் சிங் என்னும் மருத்துவருக்கும் பாரம்பரிய சீக்கிய முறையில் குருத்வாராவில் திருமணம் நடைபெற்று முடிந்தது.




48 வயதாகும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திருமணம் பற்றிய தகவல் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


முன்னதாக 2019ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பகவந்த் மான் மருத்துவர் குர்ப்ரீத் சிங்கை சந்தித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


ஆட்சியில் திருமணம் செய்யும் முதல் பஞ்சாப் முதல்வர்




இந்நிலையில், முதலைச்சரான பிறகு குர்ப்ரீத்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் தனது தாயின் கோரிக்கைக்கு இணங்க முதலமைச்சர் பகவந்த் மானுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.


இந்தத் திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில தலைவர்களும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே பங்கேற்க உள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.


முன்னதாக நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பெரும் வெற்றியை அடுத்து, கடந்த மார்ச் 16ஆம் தேதி பகவந்த் மான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆட்சியில்  இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் முதல் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் திருமணம்


மருத்துவர் குர்ப்ரீத் சிங்கின் குடும்பமும் அரசியல் பின்பலம் கொண்டது எனக் கூறப்படும் நிலையில், அவரது தந்தை, அக்காக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் ஆவர்.


தனது முதல் மனைவி இந்தர் ப்ரீத் கவுருடன் பகவாந்த் மானுக்கு 2015ஆம் விவாகரத்து ஆன நிலையில், இவர்களது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவில் தங்களது தாயுடன் வசித்து வருகின்றனர். 




 மேலும் படிக்க: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்டவர்... இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண