தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி அளித்துள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி அளித்துள்ளன என்பது குறித்து காணலாம்.
நிறுவனங்கள்:
அதிகபட்சமாக பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1,368 கோடி அளித்துள்ளது. மெகா இன்ஜினியரிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் 966 கோடியும், க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ₹410 கோடியும், வேதாந்தா லிமிடெட் ₹400 கோடியும், ஹால்தியா எனர்ஜி நிறுவனம் 377 கோடியும் நிதி அளித்துள்ளன.
தகவல் வெளியாகவில்லை:
இந்நிலையில் எந்த நிறுவனத்திடமிருந்து எந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்ற் தகவல் வெளியாகவில்லை.
இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பான மேல்முறையீடு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்ன எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அரசியல் கட்சிகள் எந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐ-வங்கிக்கு இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
இதுவரை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பணம் பெற்றது தனியாகவும், நிறுவனங்கள் பணம் அளித்தது தனியாகவும் என வெளியிடப்பட்டன. இதனால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு பணம் வழங்கியுள்ளது என்ற தகவல் தெரியாத நிலை இருந்தது.
இந்நிலையில், பின்னர், தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறும் எஸ்பிஐ-வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நாளை மறுநாளுக்குள் வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதன்பிறகு தெளிவான தகவல் கிடைக்க பெறலாம்.
Also Read: Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு- தேர்தல் ஆணையம்