அங்கீகரீக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய தேர்தல் ஆணையம், ஆணையத்தில் பதிவு செய்த 111 கட்சிகள் அதே முகவரியில் செயல்படாததை கண்டறிந்ததையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள் 1968 ஆணையின் படி அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. அதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் அவை சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிலையில்தான் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.