தங்களுடைய டீக்கடை வருமானத்தின்  மூலம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 25 நாடுகளைச்சுற்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளார்கள் கேரளாவைச் சேர்ந்த தம்பதி. அக்டோபர் 26 ல் ரஷ்யா செல்லவும் திட்டமிட்டுள்ளார்கள்.


வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச்சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரச் சூழலினால் தம் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூட செல்ல முடியாமல் தவிப்பார்கள்.  ஆனால் நம்முடைய சந்தோஷத்திற்கு எல்லாம்  வறுமை ஒரு தடையில்லை எனவும்,  நம் கனவு தான் நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கேற்ப தன்னுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் உலகைச்சுற்றிக்கொண்டிருக்கின்றனர் கேரள தம்பிகள்.





கேரள மாநிலம் கொச்சினில் காந்திநகர் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் 71 வயதான கே.ஆர் விஜயன் மற்றும் 69 வயதான மோகனா. இவர்கள் இருவருக்கும் உலகைச்சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்ததாககவும், ஆனால் இதற்குப்  பணம் ஒரு தடையாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தான், கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் விஜயன், இதன் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு உலகத்தைச் சுற்றி வரலாம் என முடிவு செய்தனர்.  இதற்காக இவர்களது கடையில் யாரையும் வேலைக்கு வைக்கவில்லையாம்.. இவர்களே முதலாளிகளாகவும் மற்றும் வேலைக்காரர்களாகவும் இருந்துவருகின்றனர்.


இப்படி தங்களுடைய டீக்கடை வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியை தங்களுடைய சுற்றுப்பயணத்திற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்தத் தொகைத்தான் தற்போது அவர்களின் கனவை நிறைவேற்றிவருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்குச் சிறிது விடுமுறைவிட்டு உலக நாடுகளுக்குப்பறக்க ஆரம்பித்தனர் கேரள தம்பதிகளான விஜயன் – மோகனா.






இதுவரை சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில்,அர்ஜென்டினா,  பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள், இப்படி உலக நாடுகளைச்சுற்றியும் போது பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது எனவும் இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வருவதாகக் கூறுகிறார் விஜயன்.  கடந்த 14 ஆண்டுகளில் எங்களது உலக நாடுகளுக்கிடையேயான சுற்றுப்பயணம் இன்னும் முடியவில்லை.  கொரோனா ஊரடங்கினால் இரண்டு ஆண்டுகள் எங்கும் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி ரஷ்யா செல்லத் திட்டமிட்டதாகக் கூறுகின்றனர். இந்த முறை தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் பயணிக்க முடிவு எடுத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கே. ஆர். விஜயன்.  மேலும் நாங்கள் இதுவரை 25 நாடுகளுக்குச்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம் எனவும் ரஷ்யா 26 ஆவது நாடு என்கிறார் மோகனா.,“ நாங்கள் சென்றதிலே  எனக்கு மிகவும் பிடித்தது சுவிட்சர்லாந்து“ தான் எனவும் கூறுகிறார். 





 இந்த முறை ரஷ்யா செல்லும் போது அதிபர் விளாடிமிர் புதின் பார்க்க நினைப்பதாகவும் கூறுகின்றனர். உழைப்பினால் தனது கனவையும், சந்தோஷத்தையும் நிறைவேற்றி வரும் இவர்களைப்பார்க்கும் போது தன்னம்பிக்கை வருவதுடன் சிறிது பொறாமையுமாகத் தான் உள்ளது. நிச்சயம் இவர்களின் வாழக்கையை அனைவரும் முன் உதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம்…