இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே. ஆண்டுதோறும் சுமார் இந்தியன் ரயில்வே 900 கோடிக்கு, மேல் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 


சமானியா மக்கள் தொடங்கி அனைவரும் ரயிலில் பயணம் செய்வார்கள். தங்களது வசதிக்கு ஏற்ப இருப்பு, ஸ்லீப்பர் உள்ளிட்ட வகுப்புகளில் வசதியுடன் மக்கள் பயணம் செய்வார்கள். 


சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பு ஏற்ற சில நாள்களிலேயே, அவர் மக்களுக்காக பல்வேறு வசதிகளைச் செய்து தரவுள்ளதாகத் தெரிவித்தனர். 


அதன்படி, இந்திய ரயில்வே தற்போது புதிதாக ஏசி 3 டயர் எகானமியை தொடங்க உள்ளது. மலிவான விலையில் சமானியா மக்களும் செல்லும் வகையில், ஏசி வகுப்பில் செல்லும் வகையில் ரயில் சுகமாகப் பயணத்தை அனுபவிக்கும் வகையில் இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.  


ஏசி 3 எகானமி வகுப்புக்கான கட்டணத்தை இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இருப்பினும் ஏசி 3வது வகுப்பின் கட்டணத்தின் விலையை விட,  ஏசி 3 டயர் எகானமி விலை சுமார் 8 சதவீதம் குறைவாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இதனால் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் மக்கள் பலரும் இந்த ஏசி 3 டயர் எகானமி வகுப்பில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த பெட்டியில் மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களிலும் இணைக்கப்படும். தற்போது வரை பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு 50 ’ஏசி 3 டயர் எகானமி’ வகுப்பு பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனால், ஏசி 3 எகானமி வகுப்பின் மொத்த எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 


புதுடெல்லி -லக்னோ ஏசி ஸ்பெஷல் மற்றும் லக்னோ மெயிலில் இந்த வசதியுடன் இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வரை, கபூர்துலா ரயில் கோச் தொழிற்சாலை, ரயில்வே 50 பொருளாதார பெட்டிகளை வழங்கியுள்ளது. இது பல மண்டலங்களில் ரயில்களில் சேர்க்கப்படும். முதல் முறையாக, ரயில்வே கோச்சுகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக  உதவும் பயணிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


சிசிடிவி 


இதில் புதிய அம்சமாக சிசிடிவி கேமராக்கள் கூடுதலாகப் பொருட்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக, ரயில் பெட்டிகளுக்குள் நடக்கும் குற்றங்கள் ரயில்வே அமைச்சகத்திற்கு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. அதற்காகவே இதனை நடைமுறை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் ரயில்வே குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தனி இருக்கைக்கும், மக்கள் வசதிக்கு ஏற்ப USB சார்ஜிங் கேபிள் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.