வன விலங்குகளுக்கு எப்போதும் சண்டை வந்தால் அதை பார்ப்பது நமக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். அப்படி ஒரு பதட்டமான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது சிறுத்தையும் பூனையும் ஒரு கிணற்றில் தவறி விழுந்து அங்கு நேருக்கு நேர் மோதி கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அது எந்த பகுதி? எப்படி நிகழ்ந்தது இந்த மோதல்?
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து சிறுத்தை புலி ஒன்று பூனையை விரட்டு கொண்டு ஓடி வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இந்த இரண்டு விலங்குகளும் தவறி விழுந்துள்ளன. அதன்பின்னர் அந்த கிணற்றுக்குள் இரு விலங்குகளும் நேருக்கு நேர் மோதி கொள்வது போல் சண்டை காட்சிகள் மிகவும் ஆச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதில் சிறிய விலங்காக இருந்த பூனை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் புலியை எதிர்த்து நின்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை தற்போது வரை 1.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் இருக்கும் அந்த பூனையின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கிணற்றுக்குள் சிக்கியிருந்த இருந்த இரண்டு விலங்குகளையும் வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு சிறுத்தைய காட்டிற்குள் மீண்டும் அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: கேரளாவில் 188 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பா? அரசு கூறிய அதிர்ச்சித் தகவல்!