இந்தியாவின் புதிய குடியரசுதலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்.
அவருக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரவுபதி முர்மு, குடியரசுத்தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ராம்நாத் கோவிந்துடன் குதிரைப்படை சூழ, அவர் நாடாளுமன்றத்தின் மையமண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தியாவின் இராண்டாவது பெண் குடியரசுதலைவராக பதவியேற்கும் பெருமைக்கு சொந்தக்காரரான திரவுபதி முர்முவுக்கு, அவர் பதவியேற்கும் இன்றைய நாளும் சிறப்பு வாய்ந்ததாக மாறியிருக்கிறது. ஆம், அதற்கு காரணம் இந்தியாவின் பெரும்பான்மையான குடியரசுதலைவர்கள் இன்றையதினமே பதவியேற்றுள்ளார்கள். அதன்படி ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பக்ருதின் அலி அகமது, ஜாகீர் உசேன் ஆகியோரை தவிர்த்து பிற குடியரசுதலைவர்கள் அனைவரும் இன்றைய தினத்திலேயே பதவியேற்றுள்ளார்கள்.
முன்னதாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. அதன்காரணமாக முன்னதாக புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், முன்னாள் ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவரான யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். கடந்த 18-ஆம் தேதி ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.அந்த வாக்குகள் அண்மையில் எண்ணப்பட்டன.
15-வது குடியரசு தலைவராகிறார் திரவுபதி முர்மு..!
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்ற பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு இறுதியில் வெற்றிபெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்