Dog Aadhaar : பீகார் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணங்களிலேயே முக்கியமானதாக இருக்கிறது ஆதார். எதாவது ஒரு தேவைக்காக அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களையோ அணுகினால் அவர்கள் முதலில் கேட்கும் ஆவணமும் ஆதார் தான். இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நாய் ஒன்றுக்கு வாங்கி, அதனை வைத்து சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர்.
நாய் பெயரில் ஆதார்
பூகார் மாநிலம் குராரு மண்டல அலுவலகத்திற்கு சாதி சான்றிதழ் கேட்டு ஒரு விண்ணப்பம் வந்தது. அந்த விண்ணப்பத்தில் ஒரு நாயின் பெயரில் கேட்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாதி சான்றிதழ் கேட்டதோடு இல்லாமல், அதனுடன் நாய்க்கான ஆதார் அட்டை நகலை சேர்ந்து அனுப்பி இருந்தனர். இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ஆதார் அட்டையில் நாயின் பெயர் டாமி என்றும், அதன் பிறந்த தேதி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டாமியின் பெற்றோர் பெயர் ஷேரு மற்றும் ஜின்னி என்றும், தொழிலுக்காக நாய் மாணவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்தனர். பின்னர். இது தொடர்பாக குராகு காவல்நிலையத்தில் புகாரும் அளித்தனர். தற்போது நாய்க்கான அதார் அட்டை விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனி மனித ஆதாரங்களில் முக்கியமாக இருக்கு ஆதார் அட்டையில் இதுபோன்று இருப்பது முறையானது அல்ல என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்று நாய்க்கு ஆதார் அட்டை தயாரித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இதுபோன்று நடப்பது இது முதல்முறையல்ல. மகாராஷ்டிராவிலும் வீட்டில் வளர்க்கும் நாய் பெயரில் அதன் உரிமையாளர் ஒருவர் ஆதார் அட்டை வாங்கியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற மற்றவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது. தனி மனித ஆதாரங்களில் முக்கியமாக இருப்பவை ஆதார். இதை இப்படி பயன்படுத்துவது மிகவும் தவறானது” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க
Pope India Visit: 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் போப் பிரான்சிஸ்.. இது தான் காரணமாம்!..