வாய் பேச முடியாவிட்டாலும் தங்கள் செய்கைகளால் அன்பை வெளிப்படுத்த விலங்குகள் என்றும் தவறுவதில்லை.


அந்த வகையில் நாய் ஒன்று தன் உரிமையாளரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வீடியோ நெட்டிசன்களை உணர்ச்சிப் பெருக்கில் தள்ளியுள்ளது.


முன்னதாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் தன் நண்பரும் உரிமையாளருமான உணவு டெலிவரி செய்யும் நபருடன் அவரது செல்ல நாய் பீட்சா டெலிவரி செய்ய செல்லும் காட்சி நெட்டிசன்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.


 






இந்த வீடியோ இணையத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


 






முன்னதாக மும்பை காவல்துறை பாம் ஸ்குவாடைச் சேர்ந்த மோப்ப நாய் ராணா உயிரிழந்ததற்கு பயிற்றுனர்கள், காவலர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது காண்போரை நெகிழவைத்தது.


ராணாவுக்கு வயது 7. லாப்ரடார் இனத்தைச் சேர்ந்த ராணாவின் மோப்ப சக்தி அபாரம் என்கின்றனர் அதனை பராமரித்த படையினர். 2016ல் பணியில் சேர்ந்த ராணா தனது பணிக் காலத்தில் வெகு சிறப்பாக செயல்பட்டது.  கடந்த ஜூலை 22 ஆம் தேதி ராணாவுக்கு உடல்நலன் குன்றியது. வயிறு உபாதைகள் காரணமாக ராணா மும்பை பாய் சக்கர்பாய் தீன்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராணா 17ஆம் தேதி காலை 10.35 மணியளவில் உயிரைத் துறந்தது.


இறுதி மரியாதை:


ராணாவுக்கு முறையாக இறுதி மரியாதை செய்யப்பட்டது. ஒரு காவல் அதிகாரி உயிரிழந்தால் எந்த மாதிரியான கார்ட் ஆஃப் ஹானர் பின்பற்றப்படுமோ அதே அளவிலான மரியாதை ராணாவுக்கும் வழங்கப்பட்டது. ராணாவுக்கு மும்பை காவல்துறை (நிர்வாகம்) இணை ஆணையர், வெடிகுண்டு நிபுணர் குழு மூத்த ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!