கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற போதை வாலிபர் இளம் பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்தார். 


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக மருத்துவர் வந்தனா தாஸ் பயணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணியில் இருந்துள்ளார் .கொல்லம் அஜீசியா மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த டாக்டர் வந்தனா, தனது பயிற்சியின் ஒரு பகுதியாக கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.


பூயப்பள்ளி பகுதியில் வீட்டில் தகராறு செய்த சந்தீப் என்ற இளைஞரை போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாலை 4 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரா தாலுக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் போது,  அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.  அதற்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தீப் மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன் மருத்துவ உபகரணைங்களை உடைத்து உள்ளார்.


கடும் ரகளையில் ஈடுபட்ட அவர், அங்கிருந்தவர்களை கத்திரிக்கோலை கொண்டு தாக்கி உள்ளார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயமடைந்த டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் 5 இடங்களில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு இருந்தது. பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து இந்திய மருத்துவ சங்கம் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர்கள் சங்கமான ஐஎம்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் அச்சுத ரெட்டி அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். இம்மருத்துவமனையில் உமர் ராஷித் தத் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாலை நேரத்தில்  மருத்துவர் அச்சுத ரெட்டிக்கும் ராஷித்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு மருத்துவமனையின் மேற்பார்வையாளர் ஓடிச் சென்று பார்த்த போது ராஷித் டாக்டரை தாக்க முயன்றார். ராஷிதிடமிருந்து தப்பிய மருத்துவர் கிளினிக்கை விட்டு வெளியே ஓடிய நிலையில்,  அவரை துரத்திச் சென்ற  ராஷீத் மருத்துவர் அச்சுத ரெட்டியின் உடலில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் ராஷீத்தை கைது செய்தனர். 


மேலும் படிக்க 


CSK vs dc, IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் டெல்லியை வெச்சுசெய்யும் சென்னை..! உதவுமா இந்த புள்ளி விவரங்கள்?