அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படம் என்னை அறிந்தால். இந்தப் படத்தில் பென்னி தயால் மற்றும் மஹதியின் குரலில் உனக்கு என்ன வேணும் சொல்லு என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலில் அதிகமாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பகுதி இடம்பெற்று இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் பெரும்பாலும் நீல நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும். அப்படி அந்த நகரம் முழுவதும் நீல நிறத்தில் இருக்க காரணம் என்ன தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தார் பாலைவனத்திற்கு கதவு நகரமாக அமைந்துள்ள பகுதி தான் ஜோத்பூர். இந்த நகரத்தின் சிறப்பு அம்சமே வீடுகளில் இருக்கும் நீல நிற சுவர்கள்தான். ராஜஸ்தானில் ஜெய்ப்பூருக்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரம் ஜோத்பூர். ஜெய்ப்பூரை பிங்க் சிட்டி என்று அழைப்பார்கள். அதேபோல் ஜோத்பூரை நீல நகரும் என்று அழைத்தால் கூட தவறு இல்லை. ஏனென்றால் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலில் நீல நிறம் அவ்வளவு ஒட்டி வந்துள்ளது. இதற்கு காரணம் தெரியுமா?
கரையான்கள் தடுப்பு:
இந்தப் பகுதி மக்களுக்கு கரையான் அரிப்புகள் தொடர்பாக ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது கரையான்கள் அரிப்பு காரணமாக பல வகையான கட்டிடங்கள் மிகவும் மோசமடைகின்றன. இவற்றை தடுக்க நீல நிறம் உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக அவர்களுடைய வீடுகளுக்கு நீல நிறத்தை அடித்து பாதுகாத்து வருகின்றனர். இயல்பாகவே நீல நிறத்தில் காப்பர் சல்பெட் மற்றும் லைம்ஸ்டோன் உள்ளதால் சிறிய பூச்சிகள் அதில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதையே அவர்கள் நம்புகின்றனர்.
சிவனின் அடையாளம்:
அப்பகுதியில் உள்ள மக்களின் சிவ பக்தி அதிகம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் சிவ பெருமான உலககை காக்க நஞ்சை குடித்தபோது அவருடைய உடம்பு நீல நிறத்தில் மாறியதாக ஒரு கூற்று உண்டு. அதிலிருந்து நீல நிறம் சிவனுடன் தொடர்புடயைது என்று இவர்கள் நம்பி வருகின்றனர். எனவே இவர்கள் தங்களுடைய வீட்டிகளுக்கு இந்த நிறத்தை பெயிண்ட் அடித்து வருகின்றனர்.
வீட்டை குளுமைப்படுத்த:
ராஜஸ்தான் மாநிலத்தில் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். 40 டிகிரிக்கு மேல் இருக்கும் வெப்பத்தை சமாளிக்க அப்பகுதி மக்கள் சிரமம் அடைவார்கள். இதன் காரணமாக நீல நிறத்தை தங்களுடைய வீட்டின் சுவர்களில் அடிப்பார்கள். நீல நிறம் சூரிய ஒலியை திருப்பி பிரதிபலிக்கும் என்பதால் வீட்டிற்கு வெப்பம் இறங்காது என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால் வீட்டிற்குள் சற்று குளுமையான சூழல் நிலவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நீல நிற வீடுகளை ஜோத்பூர் பகுதியில் உள்ள மெஹ்ரான்கார்க் கோட்டையில் இருந்து பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும். ராஜஸ்தான் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் இந்த இடத்தை பார்க்காமல் திரும்பக்கூடாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடம் இது.
மேலும் படிக்க:"கள்ள உறவில் இல்லையென்று காட்டு"! கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கிய பெண்.. குஜராத் கிராமத்தில் ஒரு அவலம்..!