தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது அம்மாநில தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் இடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. 


இதில் மிசோராம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ராஜஸ்தானில் நாளை மறுநாள் (நவம்பர் 23) மற்றும் தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் களைக்கட்டியுள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.