தமிழ்நாடு



  • அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் 

  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் - கட்சி தலைமை வேண்டுகோள் 

  • திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை அறிவித்தது தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 

  • பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படுகிறதா? - பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆவின் நிறுவனம் விளக்கம் 

  • இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுவதாக கூறி டிடிஎஃப் வாசனின் யூட்யூப் சேனலை முடக்க காவல்துறை நீதிமன்றத்தில் வேண்டுகோள் 

  • ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லா விஷயங்களிலும் தமிழ்நாடு சட்டப்பேரவையிடம் தோற்றுக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கு 

  • 250 அரங்குகளுடன் கூடிய மிகப் பிரமாண்டமான புத்தக கண்காட்சி இன்று சேலத்தில் தொடக்கம்

  • ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • எழுத்தாளர் பெருமாள் முருகனின் ’ஆளண்டாபட்சி’ நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்கு FireBird', 'JCB Prize For Literature' விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

  • நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும் - கன்னியாகுமரியில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி.பேச்சு 

  • தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக விட்டு விட்டு தொடரும் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி 


இந்தியா



  • காங்கிரஸூக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியல் மட்டுமே முக்கியம் என ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

  • இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விஷயத்தில் பொய் செய்தி பரப்புவதா? - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் 

  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு மிகவும் நல்லது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து 

  • பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என  தெலங்கானாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

  • லக்னோவில் திருமண நிகழ்ச்சியில் ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகள் தீர்ந்ததால் மோதல் - 6 பேர் காயம் 

  • கர்நாடகாவில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் விழுந்து 2 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு 

  • செந்தில்பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு வழக்கு - நவம்பர் 28 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு 


உலகம் 



  • ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

  • டொமினிகன் குடியரசு நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் - 21 பேர் உயிரிழப்பு 

  • காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் - ஹமாஸ் அமைப்பின் 3 தளபதிகள் சுட்டுக்கொலை 

  • சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடும் மோதல் - இதுவரை 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு 


விளையாட்டு



  • உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி - 2 ரசிகர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் - சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

  • உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி - ஓய்வறையில் வீரர்களை சந்தித்து ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி 

  • உலகக்கோப்பை மீது கால் வைத்து போட்டோவுக்கு போஸ் - ஆஸி., வீரர் மிட்செல் மார்ஸ் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு