திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் அதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் அண்ணாதுரையின் 117வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை குழப்பிய நபர்அதிமுகவை அழித்துவிடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என புரட்சி தலைவர் நினைத்ததை போல இந்த கட்சியை ஆட்டி விடலாம். அசைத்து விடலாம் என நினைத்து கொண்டு இருக்கின்றனர். (அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல்)அண்ணாதுரை இறந்தபின் எம்.ஜி.ஆர் காலை பிடித்து, கெஞ்சி, கூத்தாடி முதல்வராக வேண்டும் என கேட்டவர் கருணாநிதி. அப்போது எம்.ஜி.ஆரின் தயவால் மட்டும்தான் முதல்வரானார்.

Continues below advertisement

மத்திய அரசை அனுசரித்துப் போக வேண்டும்

அ.தி.மு.க-வை பா.ஜ.க விடம் அடகு வைத்து விட்டார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க., பா.ஜ., வுடன் இருந்தால் நல்ல கூட்டணி, நாங்கள் வைத்தால் கெட்ட கூட்டணியா. தமிழகத்திற்கு உதவி வேண்டுமென்றால் மத்திய அரசை அனுசரித்து போக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், இந்தியா முழுவதும் ஒரு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்தியை படிக்க வேண்டுமென நாங்கள் திணிக்கிறோம் என சொல்லவில்லை. எனவே, சட்டதிட்டத்தின்படி பணத்தை கொடுக்க முடியவில்லை. ஆனால், தி.மு.க., அமைச்சர்கள் தவறாக கூறி அரசியல் செய்கின்றனர் என்றார்.இன்று முதல் ஜி.எஸ்.டி., வரி குறைந்திருக்கிறது. இதனை ஒரு மாதத்திற்கு முன்பே பிரதமர் மோடி தீபாவளி பரிசு என தெரிவித்திருந்தார். பல ஆயிரம் கோடிகள் போனாலும் பரவாயில்லை என பல கோடி மக்களுக்கு நன்மை செய்துள்ளார் பிரதமர் மோடி. 

Continues below advertisement

உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இந்தியா சார்பில் சமாதனமாக, அன்பாக இருங்கள் என பிரதமர் சொல்கிறார். இதையெல்லாம் நாங்கள் பாராட்டினால் எதிர்க்கின்றனர்.பா ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க., தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் அண்ணாதுரை பற்றி தவறாக பேசியதால் டெல்லிக்கு சென்று உங்கள் மாநிலத் தலைவர் எங்கள் தலைவர்களை தவறாக பேசிவிட்டார் எனக்கூறி உடனடியாக கூட்டணியை முறித்த ஆண்மகன் பழனிச்சாமி எனவே, எப்போது கேள்வி கேட்க வேண்டுமோ, அப்போது கேட்போம்.பொதுச்செயலர் பழனிசாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதி பிரச்சனைகளையும், வணிகர்கள், விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார்.பொதுச்செயலர் பழனிசாமியிடம் குறைகளை தெரிவிக்கும் வணிகர்கள் உள்பட பலரை , தி.மு.க., தலைவர்கள் மிரட்டுகின்றனர். வால் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். பதவியிலிருந்து விலக்கிவிடுவோம் என கூறுகின்றனர்.நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, படிப்பு செலவையும் ஏற்றார் பொதுச்செயலர் பழனிசாமி.தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் திருடப்படுகிறது. 

திமுக அமைச்சர்களுக்கு தூக்கம் இல்லை

ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ. 1000 கொடுத்தனர். அதற்கு காரணம் அ.தி.மு.க., தான். நாங்கள் வாக்குறுதி என்னாயிற்று கேட்டபின் தான் கொடுத்தது தி.மு.க.58 மாதங்கள் ஒன்றும் செய்யாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என வந்துள்ளனர். செந்தில் பாலாஜியை மிகவும் குறை சொல்லி, ஊழல் பேர்வழி என்று பேசிய முதல்வர் ஸ்டாலின். இன்று அவரை முன்னாள் அமர வைத்து முப்பெரும் விழாவினை கொண்டாடுகிறார். அமலாக்கத் துறையிடம் செந்தில் பாலாஜி மாட்டினால், தாமும் மாட்டுவோம் என பயத்தில் உள்ளது ஸ்டாலின் குடும்பம் தி.மு.க., அமைச்சர்கள் எவரும் தூக்கமில்லாமல் உள்ளனர். வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகிறது. எப்போது சிறைசெல்வோம் என பயந்து கொண்டே உள்ளனர். கட்சி, ஆட்சி என பதவிகள் எல்லாம் தன் குடும்ப உறுப்பினர்களையே முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ளார்.

கூட்டம் கூடுபவர்கள் எல்லாம் ஓட்டு போடமாட்டார்கள் என கமல் கூறியது போல், கூட்டம் கூடுவதால் எம்.ஜி.ஆர்., போல் எல்லாரும் ஆகி விட முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்பவர்களே தலைவர்.சட்டம் ஒழுங்கு இல்லை, போதைப்பொருள் விற்பனை, லாட்டரி வரை அதிகரித்துள்ளது.விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., வின் தாலிக்கு தங்கம் தொடங்கி, மடிக்கணினி திட்டம் வரை நிறுத்தி விட்டனர். ஆனால், கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். இந்த கடனை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துதான் சரி செய்யும். எனவே தி.மு.க., வை அகற்ற தயாராக இருக்க வேண்டும்.மனம் மாறி ஏதோ ஒரு மனகசப்பில் வேறு அணிக்கு போயிருந்தால் மீண்டும் வாருங்கள், யாரோ சொன்னதை கேட்டு எதிரியிடம், துரோகிகளிடம் சென்று இருந்தால் மீண்டும் வாருங்கள் என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் என பேசினார்.