ரூ.84,000 தொட்ட தங்கம் விலை

Continues below advertisement

ஆபரணத் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கைமாறும் பறக்கும் ரயில் நிர்வாகம்

Continues below advertisement

பறக்கும் ரயில் நிர்வாகத்தை சென்னை மெட்ரோவிடம் ஒப்படைப்பதற்கு, ரயில்வே - தமிழ்நாடு அரசு இடையே வரும் டிசம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தத்தின் சாராம்சத்தை இறுதி செய்யும் பணியில் CUMTA ஈடுபட்டு வருகிறது. நிர்வாகத்தை முழுவதுமாக கைமாற்றும் பணி 2027ம் ஆண்டு டிசம்பரில் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது.

இளைஞர் படுகொலை - 4 பேர் கைது

திருச்செந்தூர் அருகே 17 வயது சிறுமியுடன் காதலில் இருந்த 24 வயது இளைஞர் மணிகண்டன், நேற்று காலை வெட்டிக்கொலை. சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன், சிறுமியின் தம்பி உள்பட 4 பேரை தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, சிறுமி வீட்டை விட்டு வெளியேறி மணிகண்டன் உடன் சென்று, பின்னர் போலீசார் சிறுமியை மீட்டு ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாகவும் முன் விரோதம் இருந்துள்ளதாக தகவல்.

அண்ணாமலை நம்பிக்கை

“டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் 2024 தேர்தலில் நம்மை நம்பி NDA கூட்டணிக்கு வந்தார்கள். அவர்களை காயப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எனவே டிசம்பர் வரை பொறுத்திருப்போம். டிடிவியை தொடர்ந்து விரைவில் ஓபிஎஸ்-ஐயும் சந்திப்பேன்"- அண்ணாமலை

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

வரி விதிப்பு, H1B விசா உள்ளிட்ட விவகாரங்கள் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு. இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாகவும் ஜெய்சங்கர் பதிவு

“முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்”

"பீகார் பேரவை தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவித்தே தேர்தலை சந்திப்போம். யாரையும் முன்னிருத்த முடியாத தலைவர்கள் இல்லாத பாஜகவை போல எங்கள் கட்சி கிடையாது”- தேஜஸ்வி யாதவ்

சுபீனுக்கு பிரியா விடை கொடுக்கும் அசாம் மக்கள்

விபத்தில் உயிரிழந்த அசாம் பாடகர் சுபீன் கார்க் உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இறுதி அஞ்சலி. உலகிலேயே அதிகம் பேர் அஞ்சலி செலுத்திய 4வது பிரபலம் என லிம்கா புத்தகத்தில் பதிவு. மைக்கேல் ஜாக்சன், போப் ஃபிரான்சிஸ், ராணி எலிசபத்துக்கு பிறகு அதிகம் பேர் அஞ்சலி. இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

பாலஸ்தீனுக்கு அங்கீகாரம்!

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஃபிரான்ஸ் அறிவிப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் இதனை அறிவித்தார் ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். பெல்ஜியம், லக்ஸம்பர்க், (அண்டோரா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

வாழ்வா? சாவா?

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது இலங்கை அணி. இரு அணிகளும் முதல் போட்டியில் தோற்ற நிலையில், இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது..

‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் உஸ்மேன் டெம்பேலே

கால்பந்தின் உயரிய விருதுகளின் ஒன்றான Ballon d'Or விருதை முதல்முறையாக வென்றார் ஃபிரான்ஸ் வீரர் உஸ்மேன் டெம்பேலே. கடந்த சீசனில் 35 கோல்கள் அடித்து அதிரடி காட்டி, PSG அணி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அவர் விளங்கினார்