பஞ்சாப் அமிர்தரஸில் உள்ள கோயில் ஒன்றில் பிரசாதமாக மதுபானம் வழங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பொம்மா கிராமத்தில் பாபா ரோட் ஷா கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் கோலாகலமாக திருவிழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டும் இரண்டு நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.இதனை முன்னிட்டு கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் பொதுவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது போல் இந்த கோவிலிலும் பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், திகைப்பிற்கு உரிய வகையில் இந்த கோவிலில் மதுபானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
இது குறித்து ஏ.என்.ஐ. செய்தியில் வெளியான வீடியோவில், ஒரு கோயில் சன்னதியில் ஏராளமான பக்தர்கள் மதுபானம் வழங்கி வருகின்றன. பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பாபா ரோட் ஷா ஆலயத்தில் கூடி கடவுளின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அவர்கள் மதுப்பாட்டில்களை வழங்குவதை காணலாம்.
பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுப்பானம் வழங்க கூடிய இந்த சடங்கு 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமிர்தசரஸ் ஃபதேஹ்கர் சூரியன் சாலையில் அமைந்துள்ள போமா கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு இந்த திருவிழாவின் சிறப்பு இதன் பிரசாதம்தான்.
பக்தர்கள் முதலில் பாபா ரோட் ஷாவுக்கு வணக்கம் செலுத்தும் முறையை செய்கின்றனர். அண்டஹ் வீடியோ அப்படியே தொடரும்போது ஒரு குழு மதுவை சேகரித்து அதையெல்லாம் ஒரு பெரிய வாளியில் ஊற்றுவதை காணலாம். மேலும் அந்த வீடியோவின் முடிவில் ஒரு மனிதன் கண்ணாடி பாட்டிலில் இருந்து மதுப்பானங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதை காணலாம்.