வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV :
இஸ்ரோவின் PSLV C- 53 ராக்கெட்டானது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த 3 செயற்கைக்கோளும் சிங்கப்பூருக்குச் சொந்தமானதாகும்.
PSLV C- 53:
PSLV C- 53ராக்கெட்டானது DS-EO, NeuSAR, Scoob-1 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஏந்தி கொண்டு விண்ணில் பாய்ந்த ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்டவுனானது நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.இந்த PSLV C- 53 ராக்கெட்டானது 55வது PSLV ராக்கெட்டாகும். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுனானது, இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
3 செயற்கைக்கோள்:
*DS-EO செயற்கைக்கோளானது 365 கிலோ எடை கொண்டது, DS-EO ஒரு எலக்ட்ரோ-ஆப்டிக் உள்ளிட்டதைக் கொண்டுள்ளது. இது நில வகைப்படுத்தலுக்கான வண்ண படங்களையும் எடுக்க உதவும். மேலும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு பயன்படும்.
*NeuSAR செயற்கைக்கோளானது 155 கிலோ எடை கொண்டது. இது இரவு மற்றும் பகலில் அனைத்து பருவ காலங்களிலும் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது.
*Scoob-1செயற்கைக்கோளானது 2.8 கிலோ எடை கொண்டது. இது கல்விசார் பணிகளுக்காக, சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது.
வெற்றிகரமாக நிலைநிறுத்தம்:
இந்நிலையில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களையும், இந்தியாவின் இஸ்ரோ-வின் PSLV C- 53 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோவின் தொடர் பயணத்தை இந்த யூடியூப் பக்கத்தில் காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்