மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் சுமார் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதற்காக மாநில அரசிடம் 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார். 


10,000 கோடி இழப்பீடு


ரத்லம் பகுதியைச் சேர்ந்த காந்து என்கிற காந்திலால் பீல் (35) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டுப் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தான் பெற்ற தண்டனைக்காகவும், தொழிலில் பெயர் இழப்பு, தொழில் இழப்பு, நற்பெயர் இழப்பு, கடன், உடல் உபாதைகள், மன வலிகள், குடும்ப வாழ்க்கை இழப்பு, கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இழப்பு ஆகியவற்றிற்காகவும் தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரியுள்ளார். "தண்டனை மூலம் தான் கடவுள் தந்த பல பரிசுகளை இழந்ததற்கு ரூ. 10,000 கோடி இழப்பீட்டு வேண்டும், எ.கா. பாலியல் இன்பம், சிறையில் இருந்த காலத்தில் எனது இளமையையும் பாலியல் இன்பத்தையும் அனுபவிக்க முடியாமல் வைக்கப்பட்டேன், மேலும் சிறையில் இருந்த காலத்தில் வழக்கு நடத்துவதற்கு 2 லட்சம் செலவாகி உள்ளது", என காந்து கூறியுள்ளார். 



மிகுந்த வேதனைக்கு உள்ளானேன்


ஆறு பேர் கொண்ட தனது குடும்பத்திற்கு ஒரே சம்பாத்தியம் செய்பவரான காந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளால் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்றும், சிறைவாசம் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான தாயாரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் கூறினார். “அந்த இரண்டு வருட சிறைவாசத்தின் போது நான் அனுபவித்த துன்பங்களை என்னால் விவரிக்க முடியாது. என் குடும்பத்தால் உள்ளாடைகள் கூட வாங்க முடியாது. நான் சிறையில் ஆடைகள் இல்லாமல், வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர வானிலையை எதிர்கொண்டேன்," என்று மனுதாரர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோளிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: பிரபலம்னா மாலையும் வரும் கல்லும் வரும்... ராஷ்மிகா குறித்து பேசிய ’நான் ஈ’ பட வில்லன்!


வாழ்க்கையை அழித்தது


"சிறைச் சோதனையானது தோல் நோய் மற்றும் வேறு சில நோய்களை ஏற்படுத்தியது, நான் விடுதலையான பிறகும் என்னை வேதனைப்படுத்தும் நிரந்தர தலைவலி உட்பட எனக்கு சிறை தந்துள்ளது. நான் இல்லாமல் அவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். "காவல்துறை தனக்கு எதிராக "தவறான, புனையப்பட்ட மற்றும் அவதூறான அறிக்கைகளை" வழங்கியதாகவும், இது தனது வாழ்க்கையையும் என் குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழித்ததாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். காந்துவின் வழக்கறிஞர் விஜய் சிங் யாதவ், இந்த மனுவை ஜனவரி 10-ம் தேதி விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது என்றார்.



என்ன நடந்தது?


2018 ஜனவரியில் ஒரு பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தனர். அந்தப் பெண் அவருடைய சகோதரனின் வீட்டிற்கு செல்வதற்கு லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்ற காந்து ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் என்று அந்தப் பெண்ணின் புகார் கூறுகிறது. மேலும் காந்து தனது தனது நண்பர் பெரு அமலியாரை அழைத்து அந்த பெண்ணை இந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறு மாதங்களாக வேலை தருகிறேன் என்ற சாக்கில் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி, குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதைக் கண்டறிந்து, காந்து மற்றும் இணை குற்றவாளியான பெரு அமலியாரை ஒரு அமர்வு நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.