சமூக வலைதளங்களில் சில வீடியோகள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 


இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எங்களில் சிலரை கார் ஏற்று கொலை செய்யும் வகையில் ஸ்கார்பியோ காரின் ஓட்டுநர் ஒருவர் நடந்து கொண்டுள்ளார். எங்களை காப்பாற்றுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஒரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் ஸ்கார்பியோ கார் ஓட்டுநர் வண்டியில் செல்லும் நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 






அதன்பின்னர் அந்த ஸ்கார்பியோ கார் வண்டியில் சென்று கொண்டிருந்த நபரை இடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரின் இந்தப் பதிவிற்கு டெல்லி காவல்துறை பதில் பதிவு செய்துள்ளது. அதில் எங்களுக்கு உங்களுடைய விவரங்களை கொடுங்கள் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 






இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கார் தொடர்பாகவும் அதை ஓட்டிய நபர் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண