நாணயங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பார்வை குறைபாடு உடையவர்கள் எளிதில் கண்டறியும் விதத்திலும் புது நாணயங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்
நாணயங்கள்
இந்தியாவில் தற்போது ரூ1, ரூ.2, ரூ.5, ரூ.10 , ரூ.20 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனாலும் நாளுக்கு நாள் நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் புதிய நாணயங்களை வெளியிட தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் புது நாணயங்களை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். மக்களின் கோரிக்கையை அடுத்து புது நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வந்த நிலையில் இன்று புதிய நாணயங்கள் வெளியாகின.
குறிப்பாக இந்த நாணயங்கள் பார்வை குறைபாடு உடையவர்களால் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் அதற்கான சிறப்பம்சங்களுடன் நாணயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நாணயங்கள் இன்று அறிமுகமாகமான நிலையில், இன்னும் சிறிது நாட்களில் மக்கள் புழக்கத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமும் ரவீந்தரநாத் தாஹூரும்
இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாஹூர் ஆகியோரின் படங்களை வாட்டர் மார்க் வடிவங்களில் அச்சிட, இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (SPMCIL) இரண்டு தனித்தனி மாதிரி ரூபாய் நோட்டுகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானியிடம் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளில் அரசின் பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்தி செய்யும் ஏதாவது ஒன்றினை அரசிடம் ஒப்படைக்கும் படி மத்திய நிதி அமைச்சகம் அறிவுருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க டாலர்களில் ஜார்ஜ் வஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் மற்றும் 19 நூற்றாண்டின் முக்கிய ஜனாதிபதிகளின் உருவப்படங்களோடு அச்சிடப்படுகின்றன. இதேபோல் இந்தியாவிலும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் தங்களின் வாழ்வினை அர்ப்பணித்த தலைவர்களான நேரு, அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, அய்யங்காளி, பட்டேல், பகத் சிங் போன்றோரின் புகைப்படங்கள் இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலால், படத்துடன் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தமிழகத்தினைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ் நாட்டிற்கு புதிய பெருமை சேரவுள்ளதாக தமிழக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் இருக்கப்போகும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்தரநாத் தாஹூரின் படங்கள் இடம் பெறுவதைப் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.