குடியரசுத் தலைவர் இரங்கல் செய்தி:


கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது நெஞ்சை உலுக்கு விபத்து என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து இரங்கல் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக, அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடலூரில் அருகே உள்ள ஆற்று நீரில் மூழ்கி  7 சிறுமிகள் உயிரிழந்தது நெஞ்சை உலுக்கும் விபத்து. இதுபோன்ற விபத்துக்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சிறுமிகளை இழந்த குடும்பத்தினருக்கு என் இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார். 






பிரதமர் இரங்கல் செய்தி:


”கடலூரில் ஆற்று நீரில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்திருக்கும் செய்தி என்னை வேதனையடைச் செய்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆறுதல்.” என்று  டிவிட்டரில் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.








கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு: 


கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையத்தையொட்டி கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட, பிரியா(17), சங்கீதா(17), சுமிதா (16) மோனிகா(15), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும்  நவநீதா(9) என ஏழுபேர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அங்குள்ள  தடுப்பணையில் குளித்த போது 7 பேரும் நீரில் மூழ்கினர். 


முதலில் தடுப்பணையில் ஏற்பட்ட சூழலில் 2 பேர் சிக்கியுள்ளனர்,   அவர்களை காப்பாற்ற முயன்ற 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர். ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.