கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 73 வயது மூதாட்டி மற்றும் அவரது மகளை கொன்று, அவரது வீட்டில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்களை திருடியாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததாக நேற்று தெரிவித்தனர். 


கொலை செய்த இருவரும் பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான கிஷன் மற்றும் அவரது உறவினர் 25 வயதான அங்கித் குமார் கிங் என காவல்துறையின அடையாளம் கண்டுள்ளனர். கிஷன் தற்போது லட்சுமி நகரில் வசித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. 


உடல் மீட்பு: 


கடந்த புதன்கிழமை, கிருஷ்ணா நகரின் E பிளாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஒரு நபர் இரவு 7.56 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ராஜ்ராணி (73) மற்றும் அவரது மகள் கின்னி கிரார் (39) ஆகியோரின் உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, வீடு முழுவதும் சூறையாடப்பட்டு இருந்தது. 


விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்கள் அந்த வீட்டிற்கு செல்வதும், வருவதுமாக 200க்கு மேற்பட்ட கேமராக்களில் பதிவாகியுள்ளது. 


 கடந்த மே 25ம் தேதி இருவரையும் கொலை செய்த கொலையாளிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் தங்களது மொபைல் போனில் இருந்த சிம்களை கொலை செய்யப்பட்டவர்களின் மொபைல் போனில் சிம்களை போட்டு பயன்படுத்தியுள்ளனர். போலீசார் தங்களை ட்ராக் செய்வதை அறிந்து மொபைல் போன்களை அணைத்துள்ளனர். 


அவர்கள் பீகாருக்கும் பின்னர் அஸ்ஸாமுக்கும் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். திமர்பூரில் உள்ள பிடி எஸ்டேட் அருகே அங்கித் குமார் சிங்கின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 


முக்கிய குற்றவாளியான கிஷன், டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் சரணடைய இருந்தநிலையில், காந்தி நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார். 


கொலைக்கான காரணம்: 


மருத்துவ உபகரணங்களை விற்கும் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்த கிஷன், பகுதிநேர வேலைக்காக ஆன்லைன் தளம் ஒன்றில் ட்யூசன் எடுப்பதாக பதிவிட்டுள்ளார். தனது 39 வயதான மாற்றுத்திறனாளி மகள் ஜின்னி கிராருக்கு கணினி ஆசிரியர் தேவைப்பட்டதை அடுத்து  ராஜ்ராணியை கிஷனை தொடர்பு கொண்டுள்ளார். 


இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராஜ்ராணி வீட்டிற்கு கிஷன் வந்து சென்று, கும்பத்தின் நம்பிக்கையை பெறுகிறார். ஒரு கட்டத்தில், கொலை செய்யப்பட்ட இருவரும் வீடு மாறுவதற்கு கிஷன் உதவி செய்துள்ளார் அப்போது, அவர்கள் கிஷனிடம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான கணக்கு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் அவர்கள் வங்கிக் கணக்கில் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருப்பதைக் கண்டறிந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 


முன்னதாக, கிஷன் சிங்கை தொடர்புகொண்டு அவர்களது ங்கிக் கணக்கில் இருந்து வேறு சில கணக்குகளுக்கு பணத்தை மாற்ற முயன்றனர், ஆனால் அந்த கணக்குகளில் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் வசதி இல்லாததால் அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அதன் பிறகு, இருவரும் மே 17 அன்று வாட்ஸ்அப்பில் தங்கள் சதித்திட்டத்திற்கு "மிஷன் மலாமல்" என்று பெயரிட்டனர். 


தொடர்ந்து சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவர் இரவு 9.50 மணியளவில் வீட்டிற்குள் நட்பு ரீதியாக நுழைந்தனர். தாகம் இருப்பதாக கூறி ஜின்னியிடம் தண்ணீர் கேட்டார், அவள் சமையலறைக்குள் சென்ற கணத்தில், அவர்கள் ராஜ்ராணியின் கழுத்தை கத்தியால் வெட்டினர். அடுத்ததாக மூதாட்டியையும் கொன்று விட்டு, போலீசிடம் இருந்து தப்ப முயல, இரத்தக்கறையை சுத்தம் செய்துள்ளனர். 


வீட்டில் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட சிலை உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.