ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை கொரோனா காரணமாக டெல்லியில் 40 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதத்தின் கடைசி 10 நாட்களில் 14 பேர் வைரஸ் நோய்க்கு ஆளானதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது அதிகமாகும். ஆகஸ்ட் 1 அன்று டெல்லியில் கொரோனா காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். 


ஆகஸ்ட் 2ல் மூன்று, ஆகஸ்ட் 3ல் ஐந்து, ஆகஸ்ட் 4ல் நான்கு, ஆகஸ்ட் 5ல் இரண்டு, ஆகஸ்ட் 6ல் இரண்டு, ஆகஸ்ட் 7ல் இரண்டு, ஆகஸ்ட் 8ல் ஆறு, ஆகஸ்ட் 9ல் ஏழு, ஆகஸ்ட் 10ல் எட்டு பேர் உயிரிழந்தனர்.


ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தலா ஒருவரும், ஜூலை 24, 25, 26, மற்றும் 27 ஆகிய தேதிகளில் தலா இரண்டு பேரும் உயிரிழந்தனர். ஜூலை 28ல் யாரும் உயிரிழக்கவில்லை. ஜூலை 29 மற்றும் 30ல் தலா ஒருவரும், ஜூலை 31ல் பூஜ்ஜிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 180 நாட்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிக அளவில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.


டெல்லியில் கோவிட்-19 காரணமாக 26,351 பேர் உயிரிழந்தனர். தேசிய தலைநகரில் கடந்த வாரத்தில் தினசரி கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளன. இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஏற்கனவே நோய்வாய்பட்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


புற்றுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் மற்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். "பெரும்பாலான நிகழ்வுகளில், கோவிட்-19 தற்செயலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என அரசு அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு மூத்த மருத்துவர் ரிச்சா சரீன் கூறுகையில், "முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது. ஏனெனில், நோய்வாய்பட்டவர்கள் மத்தியில் கொரோனா தாக்கம் கடுமையாக இருக்கும்.


கடந்த வாரத்தில், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா ஏற்படுவது அதிகரித்துள்ளது. இது ஒமைக்ரான் BA.2 வகை உருமாறிய கொரோனா காரணமாக இருக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்து தொற்றை ஏற்படுத்துகிறது" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண