டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 


10-ந் தேதி வரை விடுமுறை:


நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக ஏற்கனவே 2 நாள்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 10- ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி மார்லெனே அறிவுறுத்தியுள்ளார்.




காற்று மாசுபாடு 


டெல்லியின் காற்றின் தரம் கடுமையான அளவைத் தொட்டதை அடுத்து பள்ளிகளிக்கு விடுமுறை அறிவித்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி - என்.சி.ஆர். பகுதிகளில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் நகருக்குள் டீசல் டிரக்குகள் நுழைவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ - ஜிஆர்ஏபி நிலை 3 என்பவதாக குறியிடப்பட்டதை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. அதோடு, மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் தட்பவெப்ப நிலைகள் காரணமாக காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று தர மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.


இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


காற்று மாசு தீவிரம்


டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு குறையாத காரணத்தால் மத்திய அரசின் காற்றுமாசு கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட வழிமுறைகள்  நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. காற்றின் தரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


சனிக்கிழமை மாலை 4 மணிக்கு AQI 415 ஆக இருந்தது, ஞாயிறு காலை 7 மணிக்கு  AQI 460 ஆக உயர்ந்துள்ளது. PM2.5 அளவிற்கு காற்றில் உள்ள துகள்கள் சுவாச பாதையில் செல்ல வாய்ப்பிருப்பதால் உடல்நல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.


பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில்  அறுவடை முடிந்து விளைநிலங்களில் புற்களை எரிக்கும் பணி நடைபெறுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆண்டு இதே மாதத்தில் நிலவிய காற்று மாசு நிலையை விட இந்தாண்டும் கடுமையாக அதிகரிதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


AQI 



  • காஸியாபாத் - 410

  • குர்காம் - 441

  • க்ரேட்டர் நொய்டா - 467

  • ஃபரிடாபாத்- 461


டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேர்ந்திர யாதவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்  BS-VI ரக வானங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள், பிற மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் பாதிப்பு குறித்து ஆய்வறை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.




மேலும் வாசிக்க..


Happy Birthday Virat Kohli: ’கிங்’ கோலியின் பிறந்தநாள் இன்று! வியக்க வைக்கும் விராட்டின் சாதனை பட்டியல் இதோ!


Diwali 2023 Wishes: உங்களின் அன்பானவர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்புங்க!