Diwali 2023 Wishes in Tamil: அடுத்த வாரம் இந்நேரம் தீபாவளி கொண்டாட நாம் தயாராகிட்டு இருப்போம்ல. சிலர் தீபாவளி ரெண்டு நாள் முன்னாடியே வெடியெல்லாம் வெடிக்க தொடங்கிடுவாங்க. வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். 


இந்தாண்டு தீபாவளி நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரத காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்தும் நவம்பர், 14, 15 -ம் தேதிகளில் கோவர்தன் பூஜை, பாய் டூஜ் உள்ளிட்டவைகளும் கொண்டாடப்படுகின்றன. 


பூஜை


நவம்பர் 12-ம் தேதி ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இறைவனுக்கு பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. விநாயகரையும், லக்‌ஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதக், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்டலாம் என்றும் நம்பப்படுகிறது.


தீபாவளி அலங்காரம்


  தீபாவளி வந்தாச்சு; புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பல்கார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம். வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது, மலர் மாலைகள் என உங்கள் மனதிற்கு ஏற்றார்போல அலங்கரிக்கலாம்.


தீபாவளி விரதம்


தீபாவளி நாளில் லட்சுமியை வணங்கி விரதம் இருப்பது எல்லா நலன்களையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. காலையில் எழுந்து குளித்து விரதம் இருந்து, சிறப்பு பூஜை செய்யலாம். 





தீபாவளி வாழ்த்துகள்


உங்களது சிரிப்பை போன்றே இந்த தீபாவளியும் சிறப்பாக ஒளிரட்டும்.


தீபாவளி நாளின் தீபங்கள் உங்கள் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பாதையாக இருக்கட்டும்.


தீபங்கள் உங்கள் வாழ்வின் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழியாக அமையட்ட்டும்.


தீபாவளி நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் உங்களுக்கு அளிக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




தீபாவளி நாளில் குடும்பத்துடன் இனிமையான நினைவுகளை உருவாக்குங்கள். தீபாவளி வாழ்த்துகள்..


இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்..


தீபாவளி நாளின் ஒளியை போல உங்களது வாழ்வும் நிறைந்திருக்கட்டும்.


தீபாவளி நாளில் உங்களது கனவுகள், ஆசைகள் நிறைவேறட்டும். 


தீபாவளி நாளில் அறியாமை விலகி நன்னாளாக அமையட்டும்.


தீபாவளி இனிப்புகளை போலவே வாழ்வும் இனிக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்..


தீபாவளி நாளில் இறைவன் ஆசீர்வாதம் கிடைக்க வாழ்த்துகள்


அமைதி உண்டாகட்டும். தீபாவளி வாழ்த்துகள்..


இந்த நாளில் தொடங்கும் எல்லாமும் நல்லதாய் அமையட்டும்.


பாதுகாப்பான தீபாவளி அமைய வாழ்த்துகள்.


இருள் விலகி ஒளி பரவட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.


குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்..வாழ்த்துகள்..


அன்பான தீபாவளி வாழ்த்துகள்.






இன்னல்கள் நீங்கி ஒளி பரவட்டும். தீபாவளி நல்வாழ்த்துகள்..


உங்கள் வாழ்வில் வண்ணமயமான தொடக்கம் அமைந்திட வாழ்த்துகள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..


நண்பர்களுடன் குதூகலமான தீபாவளி கொண்டாடி மகிழுங்கள். வாழ்த்துகள். 





மங்களகரமான தீபாவளியாக அமையட்டும். தீபாவளி நல்வாழ்த்துகள்..


எல்லாரும் இன்புற்றிருக்க பிரார்த்தனைகள்..தீபாவளி நல்வாழ்த்துகள்.


மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.