Delhi Rain: தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது.


மிதக்கும் டெல்லி: 


தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நிர் தேங்கி இருக்க, சில இடங்களில் அருவியாய் பாய்ந்தோடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லி மட்டுமின்றி தலைநகர் எல்லையை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது. மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் பயணித்த இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றன. வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் தங்களது வாகனங்களை தள்ளிச் சென்றனர். பாலத்தின் சென்ற காரும் நீரில் மூழ்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.














விமான நிலையத்தில் விபத்து:


கனமழையுடன் டெல்லியில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து வருகின்றன அந்த வகையில் விமான நிலையத்தில் முதல் முனையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்ததில், சில கார்கள் முற்றிலுமாக நொறுங்கி சேதமானது. இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்:


தொடர்ந்து மழை பெய்து வருவது மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற காரணங்களால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அன்றாட தேவைகளுக்காக கூட வெளிவர முடியாத சூழல் நிலவுகிறது. கோடை காலம் தொடங்கியது முதலே டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தான் கனமழை கோடி, ஒட்டுமொத்த டெல்லியை யே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.