தலைநகர் டெல்லியில் நேற்று வெள்ளை நிற ஸார்ப்பியோ காரை ஓட்டிவந்தவர்  வேண்டுமென்றே பைக் மீது மோதியது வீடியோவில் தெரியவந்தது. டெல்லி போலீசார் கொலை முயற்சி என வழக்கு பதிவு.


டெல்லியில் அர்ஜன் கர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளை நிற ஸார்ப்பியோவில் வந்தவருக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஸ்கர்ப்பியோவினை ஓட்டி வந்தவர் பைக் ஓட்டி வந்தவர் மீது வேண்டுமென்றே வேகமாக மோதிவிட்டு வெல்லும் வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. தனது நண்பர் ஸ்கார்ப்பியோ காரின் மூலம் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டதை டிவிட்டரில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் ஸ்கார்ப்பியோ கார்னை ஓட்டி வந்தவருக்கும் பைக்கினை ஓட்டி வந்தவர்களுக்கும் இடையில் கடுமையான மற்றும் மோசமான வாக்குவாதம் தகாத வார்த்தைகளின் மூலம் நடைபெறுவதும், அதன் பின்னர் மிக வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ காரினை ஓட்டி வந்தவர் பைக் ஓட்டிவந்தவர்களில் ஒருவரின் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் செல்வதையும் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவோடு, ஸகார்ர்பியோவினை ஓட்டிவந்தவர், எங்களை கொன்று விடுவதாகவும், மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  தகவலை அறிந்த டெல்லி காவல் துறையினர் பைக்கரின் புகாரினை அடுத்து தானகவே முன் வந்து ஸ்கார்ர்பியோ காரினை ஓட்டி வந்தர் மீது கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்துள்ளது.


முதல்வர் மற்றும் பிரதமர் டேக் 






வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த அனுரக் ஐ ஐயர் எனும் பைக்கர், டெல்லி முதல்வர் கெஜிர்வால், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லியின் துணை காவல் ஆணையர் ஆகியோரினை டேக் செய்து, ‘இதற்காகவா நாங்கள் வாக்களித்தோம், இதற்காகவா நாங்கள் வரி செலுத்துகிறோம்’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.   


ஸ்கார்ப்பியோ காரினால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டவரின் புகைப்படத்தினை பகிர்ந்த அனுராக், தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், அவருக்கு காலில் உள்ள எலும்பில் இரண்டு எலும்புகள் உடைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.  


பைக் ஓட்டி விபத்துக்குள்ளானவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நான் எனது நண்பர்களுடன் குருகிராமில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டு இருந்தேன். அப்போது வேகமாக வந்த ஸ்கார்ப்பியோ கார்காரர் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், எனது நண்பர்கள் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது நான் அவர்களை முந்திச் சென்றேன். அப்போது மிகவும் வேகமாக வந்த கார் என்மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது” என்றார். தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இச்சம்மபவம் அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.