யூசர் ஐடியுடன் ஆதார்டு கார்டை லிங்க் செய்து டிக்கெட் புக் செய்பவர்களுக்கு புதிய சலுகையை இந்திய ரயில்வே வழங்கி இருக்கிறது. 






இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக இரயில் பயண சேவை இருக்கிறது. பயணத்திற்கு ஏற்ப பல்வேறு சலுகைகளை வழங்கும் ரயில்வே தற்போது புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, இந்திய ரயில்வேயின்  இணையதளம் மற்றும் ஆப்பில் பயன்படுத்தப்படும் யூசர் ஐடியுடன், ஆதார்டு காட்டை லிங்க் செய்து டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு, மாதம் 24 டிக்கெட்டுகள் வரை புக் செய்துகொள்ளும் சலுகையை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.


இந்தியன் ரயில்வே கொடுத்த சலுகை 


இது குறித்து இந்தியன் ரயில்வே,  “இந்தியன் ரயில்வே பயணிகளின் வசதிக்காக, தனிநபர் புக் செய்யும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி, ரயிலில் டிக்கெட் புக் செய்யும் பயணியின் டிக்கெட் எண்ணிக்கையானது மாதத்திற்கு 6 லிருந்து 12 ஆக உயர்த்தப்படுகிறது.


அதே சமயம் ஆதார்டு கார்டை ரயில்வேயின் யூசர் ஐடியுடன் லிங்க் செய்து டிக்கெட் புக் செய்யும் பயணிக்கு முன்னதாக மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள்  புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கையானது 24  ஆக உயர்த்தப்படுகிறது” என்று கூறியுள்ளது.  


இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது, “ அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும், குடும்ப  உறுப்பினர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரே கணக்கை பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண