சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதற்காகவே, போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் அடிக்கடி விழிப்புணர்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனத்தின் செல்லும்போது தலைகவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.




இந்த நிலையில், டெல்லி காவல்துறையினர் வீடியோ ஒன்றை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 16 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் தலைகவசம் அணிந்த நபர் எவ்வாறு இரு முறை மாபெரும் ஆபத்தில் இருந்து உயிர் தப்பினார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.






இந்த வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் அந்த நபரின் முன்பு கார் ஒன்று திரும்புகிறது. அப்போது, வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் காரின் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை திருப்ப முயற்சிக்கிறார். அப்போது, அந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்திற்குள்ளாகியது. இதில் சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட அந்த நபர் இரண்டு,மூன்று முறை தரையில் உருண்டார். ஆனாலும், அவர் தலைகவசம் அணிந்திருந்ததால் அவருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை.




இந்த விபத்தில் நிலைகுலைந்த அந்த நபர் கீழே விழுந்து எழுந்து நின்றவுடனே, அவரது இரு சக்கர வாகனம் மோதியதில் அருகில் இருந்த தெரு விளக்கு அந்த நபரின் தலையின் மேலேயே விழுந்தது. அப்போதும், அவர் தலைகவசம் அணிந்திருந்த காரணத்தால் அவரது தலையில் ஏற்பட இருந்த பலத்த காயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


இந்த வீடியோவை பகிர்ந்த டெல்லி போலீசார், தலைகவசம் அணிபவர்களுக்க கடவுளும் உதவுவார் என்று பதிவிட்டுள்ளனர்.  


மேலும் படிக்க : Watch Video : சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் தகராறு..! நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையிட்டுக்கொண்ட பெண்கள்..! வைரல் வீடியோ உள்ளே..!


மேலும் படிக்க : Subramanian Swamy: நான் இன்னும் ஹரேன் பாண்ட்யா நிலைக்கு செல்லவில்லை.. சுப்ரமணியன் சுவாமியின் பதிவு..