உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 


உத்தரபிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக தில்குஷா (Dilkusha) என்ற பகுதியில் இராணு குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்பு பணியினர் விரைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) தெரிவித்துள்ளார். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் உயிருக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 






தில்குஷா மாவட்ட ஆட்சியர் சூர்ய பால் கங்காவர் (Surya Pal Gangwar) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டாள்ளார்.


இது தொடர்பாக காவல் துறை இணை கமிஷ்னர் பியூஷ் மோர்தியா( Piyush Mordia) கூறுகையில், தில்குஷா பகுதியில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பின் வெளியே சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். தொடர் கனமழை காரணமாக இராணுவ குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிகாலை மூன்று மணியளவில் நாங்கள் சம்ப இடத்தை அடைந்தோம். இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.” என்று அவர் தெரிவித்தார். 


வளிமண்ட சுழற்சி காரணமாக அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அதிகாலை நான்கு மணிக்கு அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


 





 


ஒரு மாதத்தில் பெய்யும் மழை அளவு நேற்று ஒரே நாளில் பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 155.2 மி.மீ. மழை பதிவாகியிள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்னோவில் வழக்காமக செப்டம்பர் மாதத்தில் பதிவாகும் மழையின் அளவு 197 மி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை மழை கடுமையாக இருப்பதாகவும், கன மழை காரணமாக பல பகுதிகளை வெள்ள நீர் சூழந்துள்ளது.


முதலமைச்சர் நிவாரணம்- அறிவிப்பு:


சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேருக்கும் 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. 






கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.