டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்து வந்த அனில் பைஜால் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக தற்போது அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். 1969ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அனில் பைஜால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 2016 டெல்லியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார். இவருக்கும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு இருந்தது. 


குறிப்பாக இவருடைய பதவி காலத்தில் டெல்லி அமைச்சர்கள் அனைவரும் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தர்ணாவில் ஈடுப்பட்டனர். அதாவது டெல்லியில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் அமைச்சர்கள் கூறுவதை கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்தது. 


 






2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் டெல்லி தொடர்பான 1991ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி டெல்லி அரசின் கோப்புகள் அனைத்தும் டெல்லியின் துணை நிலை ஆளுநர் வழியாக தான் செல்ல வேண்டும் என்று மாற்றப்பட்டது. அத்துடன் துணை நிலை ஆளுநருக்கு சில சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இந்தச் சூழலில் டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


யூனியன் பிரதேசமான டெல்லிக்கு சில சிறப்பு அந்தஸ்து உள்ளது. அதாவது டெல்லியில் இருக்கும் அரசு நிலம், காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகிய மூன்று விஷயங்களில் தலையிட முடியாது. இந்த மூன்றும் துணை நிலை ஆளுநர் வழியாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:காங்கிரஸில் இருந்து விலகினார் ஹர்த்திக் படேல்: பாஜகவின் பக்கா ப்ளான்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண