- ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க!
ஒன்பிளஸ் ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுக்க, பயனாளர்களுக்கு மார்ச் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. One Plus நிறுவனம் தனது One Plus 12R மாடல் செல்போன்களை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதில், 12R 256GB வெர்ஷன் ஆனது UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பல பயனர்கள் அந்த வெர்ஷனின் குறைந்த வாசிப்பு மற்றும் எழுதும் வேகம் குறித்து புகார்களை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம், பிழையை ஒப்புக் கொண்டதோடு OnePlus 12R இன் அனைத்து வெர்ஷன்களும் UFS 3.1 சேமிப்பகத்துடன் மட்டுமே வருகின்றன என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் படிக்க..
- ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் - உங்கள் ஊருக்கு என்ன பலன் தெரியுமா?
பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளார். மேலும் படிக்க..
- இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம் - நோக்கம் இதுதான்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்கியது. மேலும் படிக்க..
- முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்; தற்காலிகமாக செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் ஒப்புதல்
அகில இந்திய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியதாக இன்று அதாவது பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கண்டனங்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது. இதனால், வருமானவரித்துறை தரப்பில் இருந்து தற்காலிகமாக வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- பெருமூச்சு விட்ட மக்கள்! பேடிஎம் பேமெண்ட் சேவையை நிறுத்த கூடுதல் அவகாசம் - எத்தனை நாட்கள் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் படிக்க..