சமீப காலங்களில் விமான நிலையங்களில் அதிகளவில் தங்க கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நடைந்துள்ளது. அதாவது துபாயிலிருந்து வந்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடத்தி வந்த சம்பவம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இந்நிலையில் இந்த கைதுதொடர்பாக டெல்லி சுங்கத்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி,"டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1369 கிராம் தங்க பேஸ்ட் கடத்தப்பட்டது. இதை இருவர் தங்களுடைய உள்ளாடைக்குள் வைத்து கடந்த முயன்றனர். அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இந்த தங்கத்தை வாங்க வெளியே இருந்தவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.
இந்த மூவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அதேபோன்று கடந்த 28-ஆம் தேதி துபாயில் இருந்து வந்த உஸ்பெகிஸ்தான் பயணிகள் இருவர் 951 கிராம் தங்கத்தை கடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் தங்கம் மற்றும் சங்கிலி ஆகியவற்றை பற்களுக்கு இடையே வைத்து கடத்தி வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இப்படி இரண்டு நாட்களில் துபாயிலிருந்து வந்த பயணிகள் நான்கு பேரிடம் இருந்து அதிகளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:10 வருடங்களில் 25 ஆண்கள்.. பெண்ணுக்கு எதிரான புகாரும்.. போலீசாரின் விசாரணையும்!