அசாமில் ஒரு பெண் கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு ஆண்களுடன் 25 முறை வீட்டை விட்டு ஓடிவிட்டதாக வினோதமான சம்பவமொன்று கூறப்படுகிறது. பெண்னின் மாமனாரின் கூறுவது படி, அந்தப் பெண் 


திருமணமானதிலிருந்து 20-25 முறை வெவ்வேறு ஆண்களுடன் 'தப்பி ஓடிவிட்டார்'. பின்னர் அவர் தனது வீட்டிற்கு திரும்பிவிட்டார், மேலும் எப்போது வந்தாலும் அவரது கணவர் ஒவ்வொருமுறையும் அவரை ஏற்க தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பெண் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணுடன் தனது திருமண வாழ்க்கையை தொடங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவள் திருமணத்திற்கு பிறகும் வெவ்வேறு நபர்களுடன் பழகினாள்.



மத்திய அஸ்ஸாமில் உள்ள திங் லாகர் கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். அவர்களின் கடைசி குழந்தைக்கு மூன்று மாத வயது. "சில நாட்களுக்கு முன்பு அவள் ஒருவருடன் ரகசிய உறவை வளர்த்துக் கொண்ட பிறகு அவருடன் ஓடிவிட்டாள். அதற்கு முன்பு அவள் 24 முறை இது போல வெவ்வேறு ஆண்களுடன் வீட்டை விட்டு ஓடி சென்றிருக்கிறார், ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் கணவன் வீட்டிற்கு திரும்பி வருவார்", என்று அந்த தம்பதியினரின் பக்கத்து வீட்டுக்காரர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அவர் வீட்டை விட்டு ஓடும் ஒவ்வொரு முறையும், ஒரு சில நாட்களுக்குள் திரும்பி வந்துவிடுவாள். சமீபத்தில், அந்தப் பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது அவள் ஓடிப்போகும்  25 வது முறையாகும் என்று அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர். ஓட்டுனராக இருக்கும் அவரது கணவர் செப்டம்பரில் வீட்டிற்கு திரும்பியபோது, ​​தனது மனைவியைக் காணவில்லை என்று கூறினார். அவர் தனது மூன்று மாத குழந்தையை அருகில் உள்ள வீட்டில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டதாக கூறினார். இதனிடையில்  அவர் ஓடிவந்து வீட்டில் இருந்த 22,000 ரூபாய் மற்றும் இதர ஆபரணங்களை எடுத்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார்.



அவருடைய மாமனார், "இந்த முறை அவள் யாருடன் தப்பிச் சென்றாள் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் திரும்பவும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, என் மகனும் ஏற்றுக்கொள்ள தான் போகிறான்" என்று கூறினார்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. உறவினர்கள், மற்றும் ஊராரின் புகாரை வைத்துமட்டுமே ஒரு பெண் மீது குற்றச்சாட்டு  வைக்க முடியாது என தெரிவித்துள்ள போலீசார், அவரது மாமனார் கூறுவது உண்மையா, ஊரில் உள்ளவர்கள் சரியாகத்தான் சொல்கிறீர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடிப்போகும் பெண்ணை விசாரித்தால் மட்டுமே உண்மை நிலையை அறிய முடியும் என்று போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.