டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலை ஆதரவு தெரிவிக்குமாறு, அவரது மனைவி சுனிதா அகர்வால் வாட்சப் எண்ணை வெளியிட்டுள்ளார்.
கெஜ்ரிவால் கைது:
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மேலும், உலக நாடுகளான ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதின் விசாரணையானது, நியாயமான முறையில் நடத்தப்படும் என நினைக்கிறோம் என தெரிவித்தது. இதற்கு, இந்தியா சார்பில் தெரிவித்ததாவது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என தெரிவித்தது.
அமெரிக்கா தெரிவிக்கையில், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தது. இதை தொடர்ந்து, தற்போது ஐ. நா-வும் விமர்சனம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் கைதை தொடர்ந்து, அவருக்கு மார்ச் 28-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Also Read: Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?
காவல் நீட்டிப்பு:
இந்நிலையில், நேற்றுடன் விசாரணையின் காவல் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. ஆனால் 7 நாட்களுக்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், 4 நாட்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் சிறையில் இருந்து கொண்டே, அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
வாட்சப் ஆதரவு :
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டு, வாட்சப் எண்( 8297324624 ) ஒன்றை வெளியிட்டார். இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒரு பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். அதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதங்கள் மற்றும் உங்களது நல்லெண்ண செய்திகளை வழங்குமாறும் தெரிவித்தார்.