Delhi liquor policy case: டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, திகார் சிறையில் உள்ள அறை எண் 2ல் அடைக்கப்பட்டார். 


காவல் நீட்டிப்பு:


டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.


அதையடுத்து, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.


இதையடுத்து, மேலும் 7 நாட்கள் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.


இந்நிலையில், இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், மீண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.






Also Read: Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?


வழக்கின் பாதை:


அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம், 2021 ஆம் ஆண்டு மதுபான கலால் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அப்போது, மதுபான விற்பனையில்  கள்ளச்சந்தையை முடிவுக்குக் கொண்டு வரவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தவும் புதிய மதுபான கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 


இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணையை  தொடங்கிய சிபிஐ, துணை முதலமைச்சராக இருந்த  சிசோடியாவின் வீட்டில் சோதனை நடத்தியது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த 15 நபர்கள் சேர்க்கப்பட்டன. இந்த  பண மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் இணைந்தது. 


 அதைத் தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அடுத்ததாக பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவுக்கும் தொடர்புள்ளதாக கூறி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளா டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.