டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அமலாக்கத்துறை கைது:
மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் மார்ச் 21 ஆம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இதையடுத்து கெஜ்ரிவால் இரவு கைது செய்யப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ள தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அமலாக்கத்துறை காவல்:
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 6 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ( மார்ச் 28 வரை ) நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் முதலமைச்சரின் கைதானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Big Breaking: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. தேசிய அரசியலில் பரபரப்பு!