டெல்லியில், செங்கோட்டை அருகே காரில் இருந்த மர்மப்பொருள் வெடித்த சம்பவத்தில் டெல்லி போலீசார் முக்கிய தகவலை அளித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு:
தலைநகர் டெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
டெல்லி போலீசார் சொன்ன தகவல்:
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து டெல்லி கமிஷ்னர் சதீஷ் கோல்ச்சா கூறுகையில் “இன்று மாலை 6.52 மணியளவில், மெதுவாகச் சென்ற கார் ஒன்று சிக்னல் அருகே போய் நின்றது. அப்போது தான் காரிலிருந்த குண்டானது வெடித்துள்ளது,, மேலும் குண்டுவெடிப்பு காரணமாக, அருகிலுள்ள வாகனங்களும் சேதமடைந்தன"
"அனைத்து நிறுவனங்களும், FSL, NIA, இங்கே உள்ளன... சிலர் சம்பவத்தில் இறந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை கண்காணிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சரும் எங்களை அழைத்துள்ளார், நிலைமை குறித்து அவருடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
உஷார் நிலையில் தலைநகர் டெல்லி
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் 1-ன் அருகே நின்றிருந்த கார் வெடித்துச் சிதறிது. இன்று மாலை சுமார் 6.55 மணி அளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்த நிலையில், காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கார் வெடித்த இடத்திற்கு அருகே இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 8 வாகனங்களிலும் தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடித்துச் சிதறிய காருக்கு அருகே நின்றிருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு
இந்த கார் குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கார் வெடித்துச் சிதறிய இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 3 முறை வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.