டெல்லி சர்வதேச விமான நிலையம் விமான நிலையங்கள் தரவரிசையில் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. காரணம் விமான நிலையத்தில் டாக்ஸி, பயணிகள் பிக் அப், பார்க்கிங், இன்டர் டெர்மினல் கனெக்டிவிட்டி என அனைத்திலும் நிலவும் குளறுபடி


இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.


அப்போது அவர், நெரிசலைக் குறைக்க 4 அம்ச திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுழைவு வாயிலும் ஒரு சிறப்பு அதிகாரி இனி பணியில் இருப்பார். தற்போது உள்ள வரிசையை 13ல் இருந்து 16 ஆக உயர்த்துகிறோம். எக்ஸ்ரே ஸ்கேனிங் அமைப்பு மேம்படுத்தப்படும். விமான நிலையத்திலுள்ள இடங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார்.


இந்நிலையில் தான் டெல்லி விமான நிலையத்தின் ரேட்டிங் மிக மிக குறைவாக உள்ளது.


ஆன்லைன் சர்வே தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் மேற்கொண்ட ஆய்வில் 38% பேர் டாக்ஸி, பிக் அப், பார்க்கிக் வசதிகள் மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் 38 சதவீதம் பேர் இண்டர் டெர்மினல் கனெக்டிவிட்டி மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.


அதேபோல் 31 சதவீதம் பேர் நுழைவுவாயில் மற்றும் பிரதான செக்கிங் ஏரியாவில் பாதுகாப்பு மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் பேக்கேஜ் சேவை மிகவும் ஸ்லோவாக இருப்பதாகக் கூறினர்.


இந்த சர்வேக்காக 172 மாவட்டஙக்ளில் இருந்து 10 ஆயிரம் ஃப்ளையர்ஸிடம் பல்வேறு கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. இதில் 66 சதவீதம் பேர் ஆண்கள். 34 சதவீதம் பேர் பெண்கள். 49 சதவீதம் பேர் டயர் 1 நகரங்களையும், 1.36 சதவீதம் பேர் டயர் 2 நகரங்களையும் 15 சதவீதம் பேர் டயர் 3 மற்றும் 4 மற்றும் ஊரக பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்


இந்நிலையில் தான் அமைச்சர் நெரிசலைக் குறைக்க 4 அம்ச திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுழைவு வாயிலும் ஒரு சிறப்பு அதிகாரி இனி பணியில் இருப்பார். தற்போது உள்ள வரிசையை 13ல் இருந்து 16 ஆக உயர்த்துகிறோம். எக்ஸ்ரே ஸ்கேனிங் அமைப்பு மேம்படுத்தப்படும். விமான நிலையத்திலுள்ள இடங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார்.


விமான நிறுவனங்கள் தங்களின் பயணிகளை முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி விமான நிலையத்தில் உள்நாட்டு சேவைக்கு வரும் பயணிகள் 3.5 மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்று கூறியுள்ளது.


இதேபோல் பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகள் அசவுகரியங்களை தவிர்க்க சீக்கிரம் வரும்படி கேட்டுக் கொண்டுள்ளது.