டெல்லியில் கடந்த ஆண்டுக்கு பிறகு கொரோனா பரவல் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்த கொடிய தொற்றினால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப்,ஹரியானவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும்  டெல்லியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், விடுமுறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,  எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


 






டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) குறைந்தது 50 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மருத்துவர்களும் ஜனவரி 5 முதல் ஜனவரி 10 ம் தேதி வரை வழங்கப்பட்ட குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டு, உடனடியாக மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எய்ம்ஸ் மருத்துவமனை தவிர, சஃப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் வீட்டிலையே தங்களை தாங்களே தனிமை படுத்திக்கொண்டனர் என்று சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில், தலைநகரில் மோசமடைந்து வரும் கொரோனா பரவல் நிலைமையை ஆய்வு செய்ய டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கூட்டத்தை கூட்டியுள்ளது. மேலும், தொற்றுநோய்களின் பரவலை கட்டுப்படுத்த ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இன்று முன்னதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்களன்று, டெல்லியில் 4,099 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, முந்தைய நாளில் 3,194 ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 28% கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது. தற்போது வரை டெல்லியில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 14,58,220 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண