நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களை இணையத்தில் விற்பதற்காக உருவாக்கப்பட்ட Bulli Bai செயலி தொடர்பாக பெங்களூரை சேர்ந்த 21 வயது இளைஞரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தியாவில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை மிக மோசமான வடிவில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில், அரசியல் சமநிலையின்மை காரணமாக பாலியல் குற்றச்செயல்களால் சிறுபான்மையின பெண்கள் அதிக அளவில் பாதிக்கக் கூடியவர்களாக உள்ளனர். பெரும்பான்மையினர் தங்களது ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் நிலைநிறுத்த சிறுபான்மையின பெண்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்செயல்களைத் தொடுக்கும் போக்கு சமீப நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களை ஏலத்தில் விற்பதற்காக Sulli Deals என்ற பெயரில் ஓப்பன் சோர்ஸ் செயலி உருவாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'சுல்லி' என்பது இஸ்லாமிய பெண்களை மிகக் கண்ணிய குறைவாக அழைக்கும் இழிச்சொல்லாகும். சமூக வலைத் தளங்களில் தீவிர இந்துத்துவ ஆதரவாளர்கள் 'சுல்லி' என்ற சொல்லை பயன்படுத்திவந்தனர். இந்த 'சுல்லி டீல்ஸ்' சம்பவத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, ' Bulli bai' என்ற செயலி கிட் ஹப் தளத்தில் செயல்படத் தொடங்கியது.
இதில், நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படங்கள் தவாறாக சித்தரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.
இந்த ஏலத்தின் மூலம் அவமானப்படுத்தப்பட்ட ஹிபா பேக் இதுகுறித்து கூறுகையில்,"இன்று, கொரோனா தொற்றினால் உயிரிழந்த எனது பாட்டியின் கல்லறைக்குச் சென்று திரும்பினேன். மோடி இந்தியாவால் ஏலம் விடும் இணையதளத்தில் மீண்டும் ஒருமுறை என படம் இருப்பதை அறிந்தேன். கடந்த முறை இந்த குற்ற செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. அன்றிலிருந்து இன்று வரை, என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தேன். மிகவும் அரிதாகவே மற்றவர்களிடம் உரையாடி வருகிறேன். ஆனால், மீண்டும் ஒருமுறை விற்கப்பட்டு இருக்கேன். கொலம்பியா பல்கலைக்கழகமே!!!... உனது மாணவி விற்கப்படுகிறார்" என்று வேதனை கொண்டார்.
பெங்களூர் இளைஞர் கைது:
இந்திய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் புரையோடிப் போயிருக்கும் பிரச்சனைகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் முக்கியமானதாகப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிகளை களையவேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்திற்கு உண்டு.
ஆனால், நான்கு மாதங்களுக்கு முன் நடந்தேறிய, Bulli deals வழக்கில் இதுவரை டெல்லி காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் தொடங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி காவல்துறையின் செயலாற்றத்தன்மையை வன்மையாக கண்டித்திருந்தது.
தற்போது, Bulli Bai செயலி தொடர்பான வழக்கை மும்பை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மும்பை சைபர் குற்றங்கள் பிரிவினர் துரித விசாரணையை மேற்கொண்டு, சந்தேகத்தின் பேரில் பெங்களூர் இளைஞரை கைது செய்துள்ளனர். 21 வயதான இவர், பொறியியல் பட்டதாரி என அறியப்படுகிறது. குற்றம் செய்த ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Triple Talaq Law: 2-ஆம் ஆண்டு நிறைவடையும் முத்தலாக் தடை சட்டம் - சாதித்தது என்ன ?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்