இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார் செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

இந்தியாவுடன் கைகோர்த்த மங்கோலியா:

அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலமாக ராணுவ பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் நகர்ப்புற மற்றும் மலைப்பகுதிகளில் வழக்கமான சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்த பணிக்குழுவாக கூட்டு படைப் பிரிவுகள் செயல்படும்.

அதே வேளையில், இந்திய ராணுவத்திற்கும் மங்கோலிய ஆயுதப் படைகளுக்கும் இடையில் இயங்குதன்மையை மேம்படுத்துவதே கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். பயிற்சி நிறைவு விழாவில் பேசிய பாதுகாப்பு செயலாளர், இந்த பயிற்சியின் போது இந்திய வீரர்களின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் நடத்தையைப் பாராட்டினார்.

மிரண்டு போன உலக நாடுகள்:

இந்தப் பயிற்சி இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையிலான நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட கலாச்சார தொடர்புகளின் நீடித்த உறவிற்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். இது ராணுவ ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகச் செயல்பட்டதாகவும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இத்தகைய கூட்டு முயற்சிகளுக்கு இந்திய ராணுவத்தின் பங்களிப்பு உலகளாவிய அமைதி காக்கும் முயற்சிகளில் முக்கிய அங்கமாக இந்தியாவின் பங்கை வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதையும் படிக்க: Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?