மருத்துவமனையில் அனுமதி:
கட்ந்த 3 தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஐதராபாத்தில் உள்ள கமினேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மருத்துவர் கண்காணிப்பில் தீபிகா:
பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், பின்பு தனியார் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
படப்பிடிப்புக்கு திரும்பிய தீபிகா:
தற்போது உடல்நிலை முற்றிலும் பழைய நிலைக்கு திரும்பி, நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீபிகா படுகோனே குழு தெரிவிக்கையில், தீபிகா படுகோன் ஏற்கனவே படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பி விட்டதாகவும், பிரபாஸுடன் புராஜெக்ட் K படப்பிடிப்பை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர்.
PROJECT K திரைப்படம்:
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் PROJECT K படத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோனே தற்போது ஐதராபாத்தில் உள்ளார். இந்த படம் தென்னிந்திய ஸ்டாருடன், அவரது முதல் படமாக பார்க்கப்படுகிறது. PROJECT K படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தவிர, தீபிகா ஷாருக்கானின் பதான் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் ஆகியவற்றின் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்