T Rajendar Meet Kamalhassan: கமலுடன் சந்திப்பு.. அமெரிக்கா பறக்கும் டி.ஆர்..? வைரலாகும் புகைப்படம்..!
உடல்நலக்குறைவினால் ஓய்வில் இருந்த டி.ஆர். ராஜேந்தர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.

உடல்நலக்குறைவினால் ஓய்வில் இருந்த டி.ஆர். ராஜேந்தர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.
Just In




இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகம் கொண்டவரான டி. ராஜேந்தர் உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையும், அவர் நலமுடன் இருப்பதையும் நடிகர் சிலம்பரசன் தனது அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தார்.
தற்போது அவர் சிகிச்சையில் இருந்து குணம் பெற்று வந்தாலும், உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வருகிற 16 ஆம் தேதி அப்பாயிண்ட் மெண்ட் வாங்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தர் தனது இளையமகனான குறளரசன் உடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன உடன் டி.ஆர் தன்னைச் சந்தித்து அழுததாக கமல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்