பஞ்சாபி திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 37.
டெல்லி அருகே குண்ட்லி-மனேசர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தீப் சித்து உயிரிழந்ததாக சோனிபட் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் அவரது பெயர் அடிபட்டது. இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. நடிகரின் மரணத்தை சோனிபட் போலீசார் உறுதி செய்துள்ளனர். "தீப் சித்து குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் பிப்லி சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது தனது காரை மோதிவிட்டார்" என்று சாலை விபத்தில் இறந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்துவின் மரணம் குறித்து ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
சித்து தனது நடிப்பு வாழ்க்கையை 2015 இல் பஞ்சாபி திரைப்படமான 'ராம்தா ஜோகி' மூலம் தொடங்கினார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தை மூத்த நடிகர் தர்மேந்திராவின் தயாரிப்பு நிறுவனமான விஜய்தா பிலிம்ஸ் தயாரித்தது. பின்னர், 'கிங்பிஷர் மாடல் ஹன்ட்' போன்ற மாடலிங் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று 'கிராசிம் மிஸ்டர் பெர்சனாலிட்டி' என்ற பட்டத்தைப் பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்