முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ஒருவர் சாலையோர அகல் விளக்கு விற்பனையாளர்களின் கடைகளை அழித்ததை காண்பிக்கும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானது.
உத்திரப்பிரதேச மாநிலம் கோமதி நகரின் பத்ரகர்புரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் மீது குற்றம் குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர் அந்தப் பகுதி போலீசார்.
அந்த பெண் தனது வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த கடைகள் காரணமாகக் கோபமடைந்துள்ளார் என்றும், இதனால் அவர் கடைகளை அகற்றுமாறு அவர் கடைக்காரர்களை எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைக்காரர்கள் கடைகளை அகற்றாததால், விளக்குகள் மீது தண்ணீரை ஊற்றி, அவர் கடைகளை உடைத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகளான அவர் சிறு குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
வெறித்தனமாகச் சென்று கடைகளை சேதப்படுத்தியதை சிறு குழந்தைகள் அவநம்பிக்கையுடன் பார்ப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் சமூக வலைத்தளத்தில் பலர் அந்தப் பெண்ணின் ஆதிக்க மனப்பாண்மையைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.